Ratchasa Raveena Interview About Surya

சூர்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விஜய் டிவி சீரியல் நடிகை பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ratchasa Raveena Interview About Surya : தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் யூடியூப் பக்கங்களுக்கு பேட்டி அளிப்பது என்பது வழக்கமான ஒன்று. வயது வித்தியாசம் இல்லாமல் நடிகைகளிடம் யூடியூப் சேனல்கள் கேட்டு கேள்விகளுக்கு அவர்களின் கூச்சமில்லாமல் பதில் அளித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் தற்போது ராட்சசன் மற்றும் ஜில்லா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ரவீனா தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் 2 சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் பேட்டி ஒன்றில் சூர்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ரவீனாவுக்கு தற்போது வெறும் 17 வயதுதான் ஆகிறது. சூர்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருக்கையில் பிரவீனா இவ்வாறு கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் இவர் அஜித்துக்கு முத்தமிட ஆசை எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய பேட்டி வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் காட்டு தீயாக பரவி வருகிறது.