Ratchan Movie Director About Rajinikanth Decision on Political

உயிருக்கு பயந்து அரசியலில் இருந்து ரஜினி விலகவில்லை என ரட்சகன், ஜோடி பட இயக்குனர் பேசியுள்ளார்.

Ratchan Movie Director About Rajinikanth Decision on Political : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது அதில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு பிறகு குணமடைந்து சென்னை திரும்பினார்.

இவர் டிசம்பர் 31-ஆம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியிருந்தார். இவ்வாறு இருந்த நிலையில் திடீரென்று இன்று தான் கட்சி தொடங்க போவதில்லை என்று தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியிருந்தார்.

இது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் அவரின் வீட்டிற்கு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இது குறித்து ரட்சகன், ஜோடி பட இயக்குனர் பிரவீன் காந்தி ரஜினிகாந்த் உயிருக்கு பயந்தவர் அல்ல என்றும் அவருக்கு பின்னணியில் அழுத்தம் கொடுத்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.