Rashmika Vs Vijay Fans
Rashmika Vs Vijay Fans

தளபதி விஜயுடன் நடிக்க ஆசைப்பட்டு பொய் சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா.

Rashmika Vs Vijay Fans : கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அதன் பின்னர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்து அதன் பின்னர் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து கலக்கினார்.

மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தல பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல.. வியந்து போன நடிகை (வீடியோ)

இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் ராஷ்மிகாவுக்கு தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசையாக இருந்து வருகிறது.

இதனை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் அதிக முறை விஜய் பற்றி பேசியுள்ளார்.

எப்போதும் அப்படி தான் ரசிகர்களுடன் உரையாடிய போது நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என கேட்டுள்ளனர். அதற்கு ராஷ்மிகா கில்லி என பதிலளித்துள்ளார்.

நடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து ஹிட் கொடுத்த அஜித் – என்ன படம் தெரியுமா? தயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி தகவல்!

இவர் கில்லி என பதில் அளிப்பதை ரசிகர்கள் நம்பவில்லை. கன்னட தேசத்தை சேர்ந்த ராஷ்மிகா எப்படி முதல் முறையாக ஒரு தமிழ் படத்தை தியேட்டரில் பார்த்திருக்க முடியும்??

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அவர் இப்படிக் கூறியுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காக தான் எப்போதும் விஜய் பற்றி பேசுகிறார் என கூறி வருகின்றனர்.

ராஷ்மிகா உங்களின் கிரஷ் யார் என்றால் அதற்கு தளபதி விஜய் தான் என கூறுவார். யாருடன் நடிக்க ஆசை என்றால் அதற்கும் விஜயை தான் கூறுவார்.

தற்போது தான் பார்த்த முதல் படமும் கில்லி என கூறியிருப்பதை தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உண்மையில் ராஷ்மிகா முதன் முதலாக இந்த படத்தை தான் தியேட்டரில் பார்த்தாரா என்பது அவருடைய குடும்பத்தாருக்கு மட்டும் தான் தெரியும்.