ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரை உலகின் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுகுவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்டன்னிங் லுக் புடவையில்… இணையதளத்தை கவர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா.!

தமிழின் நடிகர் கார்த்திக்கின் ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஸ்டன்னிங் லுக் புடவையில்… இணையதளத்தை கவர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா.!

அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வாரிசு ஆடியோ லான்ச்சில் அணிந்திருந்த புடவையுடன் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.