விருது நிகழ்ச்சியில் செம்மையாக டான்ஸ் ஆடி அசத்திய ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் அண்மையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் பெரிதளவு காட்சிகளில் இடம்பெறவில்லை என்றாலும் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த ராஷ்மிகா சமீபத்தில் கலந்து கொண்ட விருது நிகழ்ச்சி விழாவில் ரஞ்சிதமே மற்றும் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி பாடலுக்கும் நடனம் ஆடி அசத்தியுள்ளார். அதன் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.