Rashmika Mandanna Salary For Thalapathy 64 Movie.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Vijay 64
விஜய் 64 படத்தில் நடிக்க ராஷ்மிகாவுக்கு எவ்வளவு சம்பளம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படமான பிகிலில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – காரணம் கேட்டா சிரிப்பா சிரிப்பீங்க.!

மேலும் நாயகிகளாக ராஷ்மிகா மந்தனா மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று தகவல் பரவியது, அதனை நம்முடைய பக்கத்திலும் குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது, அதாவது விஜய் 64 படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பல படங்களில் கமிட்டாகி விட்டதால் கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, ஆனால் படக்குழு ராஷ்மிகாவை எப்படியாவது இந்த படத்தில் நடிக்க வைத்தே ஆக வேண்டும் என்பதால் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எவண்டா இதை கிளப்பி விட்டது – பயங்கர கடுப்பில் பிகில் படக்குழு.!

நயன்தாரா நாயகியாக அறிமுகமான போது எடுத்ததும் ரூ 1 கோடி எல்லாம் சம்பளமாக பெற்றிருக்க மாட்டார், ஆனால் ராஷ்மிகா இரண்டாவது படத்திலேயே ரூ 1 கோடி சம்பளம் வாங்க இருப்பது அவருக்கு பெருமைக்குரிய விசியம் தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.