ராஷ்மிகாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு,கன்னடம்,இந்தி, மொழிகளில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா. இவர் தமிழில் சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் அழகான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர் என்றே சொல்லலாம்.
தற்போது அவருக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் அவரது வீட்டில் ரெஸ்ட்டில் இருக்கிறார்.
இது குறித்த தகவல் ஒன்றை வெளியிட்ட ராஷ்மிகா அதில், கடந்த ஒரு மாதமாக நான் மிகவும் சுறுசுறுப்பாக இல்லாததற்கு காரணம் எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு நான் குணமடைந்து மருத்துவர்கள் சொன்னபடி வீட்டில் இருந்ததால்தான். நான் இப்போது நன்றாக இருக்கிறேன் எனவே எனது செயல்பாடுகளை சிறப்பாக கையாள உள்ளேன்.
மேலும் உங்களை கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.நமக்கு நாளை கிடைக்குமா என்று தெரியாது எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள் என்று பதிவை வெளியிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் பலரும் இவருக்கு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.