Rashmika Mandanna in Thalapathy 65

தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே மட்டுமல்லாமல் இன்னொரு நடிகையும் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna in Thalapathy 65 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் பூஜா ஹேப்பி மட்டுமல்லாமல் இன்னொரு நடிகையும் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை நடிகை ராஷ்மிகா மந்தனா தான் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. பூஜா ஹெக்டே விஜயுடன் முதல் முறை ஜோடி சேருகிறார். அவரைப்போலவே ராஷ்மிகா மந்தனாவும் விஜயுடன் ஜோடி போடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.