Rashmika Mandanna in Shankar Direction

இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna in Shankar Direction : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவை வைத்து தெலுங்கில் படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.