நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna in Childhood Photo : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரையுலகம் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அடடடடா நடிகை ராஷ்மிகா மந்தனாவா இது?? சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள் - இணையத்தைக் கலக்கும் புகைப்படம்

தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.