
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா கடந்த சில மாதங்களாக விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த வதந்திகளுக்கு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுடன் ஆன காதலை முறித்துக் கொண்டதாகவும் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்பவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் விரைவில் காதல் திருமணம் நடக்கும் என்றும் அதே வதந்திகள் தற்போது கூறுகின்றன.

ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுக்கு முன்பு நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா மந்தனா காதலித்ததாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனாவின் காதலர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ’ரெயின்போ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் ’புஷ்பா 2’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’அனிமல்’ என்ற ஹிந்தி படத்திலும் மேலும் இரண்டு தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.