Rashmika Mandanna About Favourite Cricket

கிரிக்கெட்டில் இவர் தான் என்னுடைய ஹீரோ என ராஷ்மிகா மந்தனா பேசியிருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Rashmika Mandanna About Favourite Cricket : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் தற்போது தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் நடிகையாக வலம் வருகிறார்.

இவர் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு ஆதரவு தெரிவித்து அந்த அணியின் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து தள்ளி வருகிறார். இதனால் இவருக்கு விராட் கோலி தான் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதி செய்து கொள்வதற்காக இன்ஸ்டாகிராமில் லைவில் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவிடம் உங்களின் ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்டனர். அதற்கு ராஷ்மிகா மந்தனா உடனடியாக மகேந்திர சிங் தோனி என கூறியுள்ளார்.

அவருடைய பேட்டிங், பௌளிங், கேப்டன்சி என அனைத்தும் தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். காரணம் தோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது தான்.