Rashmika Mandana with Puppy

ராஷ்மிகா மந்தனா தன்னை மிகவும் கவர்ந்தவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‌‌

Rashmika Mandana with Puppy : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய செல்லப்பிராணி நாய் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னை மிகவும் கவர்ந்து விட்டாய் என கூறியுள்ளார்.