Rashmika-Mandanna

Rashmika Mandana : தமிழில் முதல் படத்திலேயே டாப் ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதனால் அவரது ரசிகர்கள் குஷியாகியள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா.

விஜய், சூர்யா கூட நடித்ததெல்லாம் போதும், அடுத்த குறி இவர் தான் – கீர்த்தி சுரேஷின் திட்டம்.!

இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக பேச்சுகள் எல்லாம் பலமாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் இறுதியில் தளபதி 63 படத்தின் நாயகியாக நயன்தாரா கமிட்டானார், இதனையடுத்து தற்போது ராஷ்மிகா கார்த்திக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாருடன் நடிக்க ஆசை அஜித்தா? விஜயா? – சிம்பு நாயகி ஓபன் டாக்.!

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.