Thalapathy Vijay and Rashi Khanna
தளபதி விஜயோட நடிக்கணும் என்பது என்னுடைய கனவு என பதிவிட்டுள்ளார் பிரபல நடிகையான ராசி கண்ணா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர்.

சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களிலும் பாதிக்கு மேல் விஜயின் ரசிகர்களாக தான் தங்களை வெளிக்காட்டி கொள்கின்றனர்.

தற்போது ராசி கண்ணாவும் அதே தான் செய்துள்ளார். ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் தளபதி விஜயை பற்றி கூறுங்கள் என கேட்க அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என பதிலளித்துள்ளார்.

ராசி கன்னாவின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.