
மகள் பேட்மிட்டன் விளையாடும் அழகை ஓரமாக நின்று தளபதி விஜய் ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
Rare Video of Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் விளையாடும் அழகை தளபதி விஜய் ஓரமாக நின்று ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இதோ பாருங்க