சிம்பு வெளியிட்ட புகைப்படம் பத்து நிமிடத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.

Rare Photo of Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பிரபல நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹூரோவாக அறிமுகமானார்.

தற்போது சிம்புவின் நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள பத்து தல என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை ஜில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

தற்போதெல்லாம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகின்றன. இந்த நிலையில் அவர் மீசையின்றி கையில் நோக்கியா போனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டுபிடிங்க எனவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வெளியான 10 நிமிடத்தில் 15,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது என்பது தான் செம ஹைலைட்.

சிம்பு வெளியிட்ட புகைப்படம்.. 10 நிமிடத்தில் இவ்வளவு லைக்கா?? பரபரப்பான இன்ஸ்டாகிராம் - இது நீங்களே பாருங்க.!!