ரஞ்சிதமே பாடலின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் குடும்ப திரைப்படமாக கடந்த 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தில் ராஜு தயாரிப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து ஆட்டம் போட வைத்திருந்தது. இணையத்தில் தற்போது வரை ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து வரும் இப்பாடலில் கடைசியில் நடிகர் விஜய் 90 செகண்ட்ஸ் சிங்கிள் சாட்டில் டான்ஸ் ஆடி அனைவரையும் அசர வைத்திருந்தார். தற்போது அதன் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஜானி மாஸ்டருடன் தளபதி விஜய், ராஷ்மிகா பிராக்டிஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ