வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியானது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கம் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

பட்டைய கிளப்பும் ரஞ்சிதமே.. வெளியானது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் - வீடியோ இதோ

மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட நடிகைகள் மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, ஸ்ரீகாந்த், நடிகர் ஷாம் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மூன்று போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில் படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பட்டைய கிளப்பும் ரஞ்சிதமே.. வெளியானது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் - வீடியோ இதோ

அதன்படி தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்