Ranji Trophy Cricket Himachal Team – ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் தமிழ் நாடு மற்றும் இமாச்சல பிரதேச அணிகள் மோதினர்.
தமிழ்நாடு அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இமாச்சல அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கவே தமிழக அணிக்கு ரன் சேர்ப்பதில் சற்று கடினம் அதிகமாகவே இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
இமாச்சல அணியின் சிறப்பான பந்து வீச்சால் தமிழ் நாடு அணி 227 ரன்களில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இமாச்சல அணி சிறப்பாக விளையாடியது.
பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது இமாச்சல அணி.
இமாச்சல அணியின் வீரர் அங்கித் கல்சியி 144 ரன் எடுத்தார். இறுதியில் இமாச்சல அணி 463 ரன்கள் எடுத்து ஆல் அவுடானது.
236 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி அபிநவ் முகுந்த் 128 ரன்கள், பாபா இந்திரஜித் 106 ரன்கள் எடுக்க தமிழ் நாடு 345 ரன்கள் எடுத்தது.
இதனால், 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய இமாச்சல அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்தது, 9 விக்கெட் வித்யாசதில் இமாச்சல அணி அபாரமாக வெற்றி அடைந்தது.
இந்த தோல்வியால் தமிழ் நாடு அணி 1 வெற்றி, 2 தோல்வி மற்றும் 4 டிரா என 12 புள்ளிகள் பெற்று 8-வது இடதில் உள்ளது.