Ranji Cricket – Tamilnadu vs Punjab – ரஞ்சி கோப்பை தொடரின் தமிழ்நாடு – பஞ்சாப் அணியை எதிர்கொண்டு ஆட்டத்தை சமன் செய்தது.
ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி தனது 6-வது சுற்று போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டம் இன்று வரை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு – பஞ்சாப் இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி.
பஞ்சாப் அணியின் கோனி மற்றும் பால்டெஜ் ஆகியோர் 5, 3 விக்கெட் வீழ்தினர். பஞ்சாப் அணியின் சிறப்பான பந்து வீச்சால் தமிழக அணி 215 ரன்களில் எல்லா விக்கெட்டும் இழந்தது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் இளம் வீரர் ஷீப்மான் கில் சிறப்பாக விளையாடி 328 பந்துகளில் மொத்தமாக 268 ரன்களை குவித்து அசத்தினார்.
மொத்தமாகா பஞ்சாப் அணி 479 ரன்களை எடுத்தது. மற்றும் தமிழக அணியின் சுழற் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 6 விக்கெட் எடுத்தார்.
தமிழ்நாடு அணி 264 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஆட்டத்தில் 166 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்றிய ஆட்டதில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய தமிழ்நாடு 121 ஓவரில் 6 விக்கெட் இழந்து 383 ரன்கள் எடுக்கவே ஆட்டம் சமன் செய்யப்பட்டது.