
Ranga Raj Pandey : தல 59 படத்தில் ரங்கராஜ் பாண்டே அவர்களும் நடிக்க இருப்பதாகவும் அது என்ன கதாபத்திரியம் என்ன என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன், சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
நேற்று நடந்த இந்த படத்தின் பூஜையில் பிரபல தொகுப்பாளரும் தந்தி டிவி சேனலின் தலைமை செய்தியாளராக பணியாற்றிய ரங்கராஜ் பாண்டேவும் கலந்து கொண்டிருந்தார்.
இது குறித்து விசாரிக்கையில் இந்த படத்தில் அவரும் பிரபல தொகுப்பாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.