Ranchi Test Match-Dhoni
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தை பார்க்க தோனி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranchi Test Match : தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் இரு டெஸ்டில் சாதித்த இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் துவங்குகிறது.

இப்போட்டியை காண வருமாறு ராஞ்சியை சேர்ந்த ‘சீனியர்’ விக்கெட் கீப்பர் தோனிக்கு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற தோனி, டெஸ்ட் போட்டியை காண வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 கடைசியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனியின் வருகையால் கூடுதல் ரசிகர்கள் மைதானத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜீ கூறுகையில்,”ராஞ்சிக்கு தோனி உறுதியாக வருவார்.

டெஸ்ட் போட்டியை காண, ஏதாவது ஒருநாள் மைதானத்துக்கு வரவுள்ளதாக கேள்விப்பட்டேன்,” என்றார்.

டாஸ் போடப்பட்டு இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. மூன்று விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் சேர்த்து உள்ளது இந்திய அணி.

இந்த நிலையில், டாஸ் போடப்பட்டு இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. மூன்று விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் சேர்த்து உள்ளது இந்திய அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here