Ramya Pandiyan About BB4
Ramya Pandiyan About BB4

தலயா தளபதியா நீங்க யார் தான் என ரசிகர் கேட்டதற்கு பளிச்சென பதிலளித்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandiyan About BB4 : தமிழ் சினிமாவின் ஜோக்கர் என்ற படத்தின் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தார்.

இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களிலேயே நடித்திருந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா அதிகம் பரவ ஸ்டாலின் தான் காரணம்? – முதல்வர் பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு, காரணம் என்ன?

இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங்கில் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் தல பேனா? தளபதி பேனா? என கேட்டதற்கு நான் தளபதி ரசிகை என ஓப்பனாக கூறியுள்ளார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொள்கிறீர்களா என கேட்டதற்கு இதுவரை என்னை பிக்பாஸில் கலந்து கொள்ள யாரும் அணுகவில்லை. ஒருவேளை அழைத்தால் பார்க்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது உறுதியாகியுள்ளது.