Ramya Pandian With BMW car

BMW கார் வாங்கியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian With BMW car : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரன்னராக வென்றார். கலக்க போவது யார் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். தற்போது சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் ரூபாய் 55 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கியுள்ளார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் ரம்யா பாண்டியன் காருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வண்டிய விட்ரா EVP-க்கு என ரஜினி ஸ்டைலில் வாழ்த்தியுள்ளார்.