Ramya Pandian Movie Pooja Video

ரம்யா பாண்டியன் நடிக்க உள்ள புதிய படத்திற்கு பூஜை போட்ட வீடியோவை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Ramya Pandian Movie Pooja Video : தமிழ் சினிமாவில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ஆண்தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தார்.

ஜோக்கர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் வெக்ஸ் ஆன ரம்யா தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி சாதாரணமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி அவருக்கு பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

இதனை அடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரம்யா உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது ரம்யா பாண்டியன்சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் வாணி போஜனும் முக்கிய வேடத்தில் இணைந்து நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

இப்படத்தின் பூஜை வீடியோவை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு பாடகர் கிரிஷ் இசையமைக்க உள்ளார். தனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த சூர்யாவுககு நன்றி என அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.