Ramya Krishnan

Ramya Krishnan : சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாசமாக பட நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கவே 37 டேக் வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நாயகி, வில்லி, குணசித்திர வேடம் என வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.

தளபதி 63 இப்படி தான் இருக்க போகுது – விஜயே வெளியிட்ட தகவல்.!

இவர் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆரம்பத்தில் அனைவர்க்கும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி இருந்தது.

அதன் பின்னர் ட்ரைலர் வெளியானதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. பொதுவாகவே ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

இந்த படத்தில் துணிந்து ஆபாச பட நடிகையாக நடித்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு மட்டுமே இரண்டு நாட்களாக 37 டேக் வாங்கி நடித்து கொடுத்துள்ளார்.

முதலில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் நடிக்க நதியாவை தான் அணுகியுள்ளனர். அவர் மறுத்து விடவே ரம்யா கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.