Ramya Dance : பரதமாடிய ரம்யாவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து கமெண்ட் அடித்துள்ளனர் நெட்டிசன்கள் சிலர்.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருபவர் ரம்யா.
இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு அனைத்து விதமான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் பாட்டுக்கு சம்மந்தமே இல்லாமல் ஆடுறீங்க என கலாய்த்துள்ளார். இதனை பார்த்த மற்றொருவர் என் மனசுல இருந்த பாரத்தை இறக்கிடீங்க என கூட சேர்ந்து மேலும் கலாய்த்துள்ளார்.
ஆனால் பெரும்பாலான நெட்டிசன்கள் ரம்யாவை பாராட்டியே கமெண்ட் செய்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.