Ramesh Thilak Not in Bigg Boss 3 Tamil | Ramesh Thilak is not Participating in Big Boss Season 3 tamil | kamal haasan | Kollywood

சூது கவ்வும், விஸ்வாசம் படங்களில் நடித்த ரமேஷ் திலக் பிக் பாஸ் 3-ல் பங்கேற்பதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Ramesh Thilak Not in Bigg Boss 3 :

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் – நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது.  முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தேர்வாகியுள்ளார். இவர்போக சூது கவ்வும், விஸ்வாசம் படங்களில் நடித்த ரமேஷ் திலக்கும் இதில் பங்கேற்பதாக ஒரு செய்தி பரவியது.

ஆனால் இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.