மகேஷ்பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் மரணமடைந்தார்.

Ramesh Babu Passes Away : தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாரடைப்பால் மரணம்.. மகேஷ்பாபு வீட்டில் பெரும் சோகம் - ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் இவருடைய அண்ணனும் நடிகருமான ரமேஷ் பாபு அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

மாரடைப்பால் மரணம்.. மகேஷ்பாபு வீட்டில் பெரும் சோகம் - ரசிகர்கள் அதிர்ச்சி

தற்போது 56 வயதாகும் இவர் நடிகராக 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். முன்னணி தயாரிப்பாளராகவும் பல்வேறு படங்களை தயாரித்து வந்தார். இதனிடையில் இவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.