சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Rame Andaalum Ravanan Aandaalum Movie Release Update : அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார்.

திருவண்ணாமலை கோவில் தீபத் திருவிழா : நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டி தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

ஆயுத பூஜையில் Suriya ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம Treat – கொண்டாட தயாராகுங்கள்.! | Tamil News HD

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.