Ramcharan Decision on Shankar Movie

இந்தியன் பிரச்சனையால் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க இருந்த நிலையில் அவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Ramcharan Decision on Shankar Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரு அளவிற்கு நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளி போய் வந்தது.

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு சங்கர் தான் காரணம் இது எழுப்பி படத்தை முடித்து கொடுக்காமல் அவர் வேறு படத்தை இயக்கக் கூடாது மற்ற படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தப் பிரச்சனைகள் காரணமாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருந்த ராம் சரண் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படத்திற்கு செல்லமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அவருடைய இயக்கத்தில் நடிப்பேன் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜியிடம் கூறியுள்ளார். ‌‌

இதனால் ஷங்கர் மற்றும் ராம் சரண் இணையும் திரைப்படம் திட்டமிட்டபடி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.