கார் விபத்திற்கு பிறகு நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

கார் விபத்திற்குப் பிறகு குழந்தைகளுடன் ஃபன் பண்ணும் ரம்பா!!… வெளியான வீடியோஸ் வைரல்!.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த சமயத்தில் அண்மையில் நடிகை ரம்பா கனடாவில் குழந்தைகளை ஸ்கூலிலிருந்து காரில் அழைத்து வரும்போது விபத்தில் சிக்கியதாக போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இவரும் மூத்த மகளும் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில் இளைய மகள் மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிய வந்திருந்தது.

கார் விபத்திற்குப் பிறகு குழந்தைகளுடன் ஃபன் பண்ணும் ரம்பா!!… வெளியான வீடியோஸ் வைரல்!.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மகள் தற்போது பத்திரமாக வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், ரம்பா தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வார விடுமுறையை கொண்டாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘ஹபீபி. என் வீட்டில் தொடங்கியது. இந்த வார இறுதியில் குழந்தைகள் மீண்டும் ஃபார்முக்கு வந்தார்கள். அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.