
நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தன. குறிப்பாக கரகாட்டக்காரன் என்ற திரைப்படம் ஆயிரம் நாட்கள் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இதில் ராமராஜன் நடிக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது வேறு ஒரு படத்தின் மூலமாக அவர் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார்.
அதாவது சாமானியன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ராமராஜன். மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரில் ராமராஜன் உடன் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.