Ramadoss statement
Ramadoss statement

Ramadoss statement – சென்னை: “காதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இருந்து இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து டுவிட்டரில் டிவிட் செய்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றம் குறித்து தற்போது நாடெங்கும் அதிர்ச்சி அதிர்வலை பரவியுள்ளது.

பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது.

இதில் 250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பலை சேர்ந்த 4 பேர் தற்போது கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதனால் இவர்கள் மீது போலீஸ் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை டுவிட்டரில் டிவிட் செய்துள்ளார். அதில், ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன.எனவே “காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது.

காதல் வலை வீசும் மனித மிருகங்களிடம் இளம்பெண்களுக்கு எச்சரிக்கை தேவை ” என பதிவிட்டிருந்தார்.