சங்கர் படத்துக்காக ராம்சரண் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Ram Charan Salary for Game Changer Movie : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவருடைய மகன் ராம் சரண் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய 15 வது படமாக சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்கிறார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தைத் தொடர்ந்து ராம்சரண் இந்த படத்தில் நடிக்கிறார்.

இதுவரை 30 முதல் 40 கோடி வரை ராம் சரண் சம்பளம் வாங்கி வந்த நிலையில் சங்கர் இயக்கும் இந்த படத்திற்காக 60 கோடி சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

RRR திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற்றதும் ராம்சரண் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரே அத்வானி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.