Ram Charan in Shankar Direction

முதல்வன் 2 படத்தில் விஜய், ரஜினி, அஜித் ஆகியோர் நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் புது ஹீரோவை கண்டுபிடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

Ram Charan in Shankar Direction : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முதல்வன்.

சங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஆனால் தற்போது கமல் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் முதல்வன் 2 படத்தை இயக்கி முடித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

விஜய், ரஜினி, அஜித்துக்கெல்லாம் நோ, முதல்வன் 2 படத்திற்காக புது ஹீரோவை பிடித்த சங்கர் - யார் அவர் தெரியுமா??

மேலும் இவர் கமல்ஹாசனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர்கள் இணையும் படம் முதல்வன் 2 படத்தின் கதை தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரில் ஒருவர் முதல்வன் 2 படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ராம்சரண் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கூட்டணியில் வெளியாக உள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ரஜினி, அஜித்துக்கெல்லாம் நோ, முதல்வன் 2 படத்திற்காக புது ஹீரோவை பிடித்த சங்கர் - யார் அவர் தெரியுமா??