Rakul Preet Singh Tested COVID19 Possitive

சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் கொரானாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Rakul Preet Singh Tested COVID19 Possitive : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரகுல் பிரீத் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால் அவர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரானா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.