Rakul Preet Talks about NGK : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie |

Rakul Preet Talks about NGK :

என் ஜி கே படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதாகவும் சூர்யா செல்வராகவன் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி என்றும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

வடிவேலு மருமகள் யார் தெரியுமா? கோடி கோடியாய் சம்பாதிக்கும் வடிவேலுவா இப்படி செய்தார்? – ஆச்சரியப்பட வைக்கும் தகவல்.!

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

அதேபோல் இந்த படத்தில் சூர்யா ரகுல் ப்ரீத் சிங்கை காதலிக்கிறாரா இல்லையா என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே உள்ளது.

ஆனால் இது எதுவும் தெரியாமல் என் ஜி கே படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதாகவும் சூர்யா செல்வராகவன் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி என்றும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

மேலும் மீண்டும் கார்த்தி ஜோடியாக நடிக்க தயாராக இருப்பதாகவும் ரகுல் பிரீத் சிங் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.