சுஷாந்த் சிங் காதலி கொடுத்த லிஸ்டில் என்ஜிகே பட நாயகி பெயரும் இடம்பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rakul Preet Singh in Drugs Issue : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்து வந்த நிலையில் அவருடைய காதலி போதை மருந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட எம்எஸ் தோனி – ரசிகர்கள் சோகம்

மேலும் சுசாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்ந்து ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் போது அவர் யார் யார் போதைபொருள் பயன்படுத்துதல் மற்றும் கொள்முதல் செய்கிறார்கள் என்ற லிஸ்ட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த லிஸ்ட்டில் பிரபல முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் என் ஜி கே, தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்.

மேலும் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரவிக்குமார் இயக்கி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.