Rakul Preet Singh Clarification on Ayalaan Shoot
Rakul Preet Singh Clarification on Ayalaan Shoot

சிவகார்த்திகேயன் பட சூட்டிங்கை மறுத்ததாக பிரபல பத்திரிக்கை என்று பதிவிட்டு இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh Clarification on Ayalaan Shoot : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றிக்குப் பிறகு நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என்னைக்கா இருந்தாலும் நான் தான் உங்க ஃபர்ஸ்ட் தயாரிப்பாளர்.. பிரபலத்தின் போட்டோவிற்கு கமெண்ட் அடித்த சிவகார்த்திகேயன் – யார் அவர் தெரியுமா?

அயலான் திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். தற்போது இவர் இப்படத்தின் சூட்டிங்கை மறுத்து விட்டதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் எப்போதுதான் உண்மையை அறிந்து பதிவிடும் பத்திரிக்கையாளராக மாறப் போகிறீர்கள்? தற்போது எங்கே ஷூட்டிங் தொடங்கிவிட்டது? உங்களின் டிஆர்பி காக கண்டபடி பதி விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அயலான் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க வில்லை என்பது உறுதியாகி உள்ளது.