கணவர் போட்ட கண்டிசன் காரணமாக மறுப்பு தெரிவித்து விவாகரத்து வரை சென்றுள்ளார் ரட்சிதா.

Rakshitha and Dinesh Divorce Issue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரட்சிதா. சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்துகொண்ட இவர் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். ‌‌‌‌‌

இதனை இருவரும் அறிவித்திருந்த நிலையில் இவர்களது பெற்றோர்கள் இருவரையும் சேர்த்து வைக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தினேஷ் ரட்சிதா சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்தினால் குழந்தை பெற்றுக் கொண்டு நல்ல படியாக வாழலாம் என கூறுகிறார்.

ஆனால் ரட்சிதா என் நடிப்புத் திறமையை கைவிட முடியாது என உறுதியாக இருப்பதால் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.