Rakki Cinemas Announcement to Ajith Fans

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் ஹேப்பி நியூஸ் ஒன்றை பிரபல திரையரங்கம் வெளியிட்டுள்ளது.

Rakki Cinemas Announcement to Ajith Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்டேட்டிற்காக ஒன்றரை வருடங்களாக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழு இதுநாள் வரை எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்கள்.

அதாவது ராக்கி சினிமாஸ் திரையரங்கம் வரும் மார்ச் 12ம் தேதி முதல் பில்லா திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது.

இதனால் அத்திரையரங்கத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.