Rakhi Sawant in Bigg boss 13 season with her lover
Rakhi Sawant in Bigg boss 13 season with her lover

Rakhi Sawant in Bigg boss 13 season with her lover

பிரபல சர்ச்சைக்குரிய நாயகி ராக்கி சாவந்த் தனது காதலருடன் பங்கேற்க இருப்பதாக தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இது ஒருபக்கம் இருக்க இந்தியிலும் இதன் 13-வது சீசன் கூடிய விரைவில் துவங்க உள்ளது இதை சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார் இந்த நிகழ்ச்சியில் பிரபல சர்ச்சைக்குரிய நாயகி ராக்கி சாவந்த் தனது காதலருடன் பங்கேற்க இருப்பதாக தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.