தனது பேவரைட் போட்டியாளரை சந்தித்துள்ளார் பிக்பாஸ் ராஜு.

Raju With Imman Annachi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று 50 லட்சம் பணத்தை வென்றார் ராஜு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ராஜு தன்னுடைய ஃபேவரைட் போட்டியாளரான இமான் அண்ணாச்சியை நேரில் சந்தித்து உள்ளார். ராஜுவை சந்தித்த மகிழ்ச்சியை இமான் அண்ணாச்சி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வேர்ல்ட் கப் மேட்ச் ரெடி : பிப்ரவரி 7-ந்தேதி டிக்கெட் விற்பனை

திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா.., Jack & Roshini-ன் கலக்கல் Shopping | Saravana Stores | T-Nagar

இதுகுறித்த அவரது பதிவில் கூறியிருப்பதாவது, வீட்டு பூந்தோட்டத்தில்

முளைத்த செடியிலிருந்து
கொடியின் பூக்கள் வரை
ஒன்றில் இரு வண்ணம்
அண்ணனும் தம்பியும் போல..!

அண்ணனுடன் பிறந்த
தம்பிகளுக்கு மட்டும் தான்
தெரியும் அண்ணனுக்கு
இன்னொரு பெயர்
அப்பா என்று..! தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.