பிரபல தமிழ் நடிகரால் தளபதி 66 படத்திலிருந்து விலகியுள்ளார் இயக்குனர் ஒருவர்.

Raju Murugan Quit From Vijay 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

படத்தில் வசனம் எழுதும் இயக்குனராக தமிழ் சினிமாவை சேர்ந்த ராஜமுருகன் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் படத்தின் பூஜையில் பங்கேற்காததால் இந்த படத்தில் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

ராஜூமுருகன் அடுத்ததாக கார்த்தியை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதன் காரணமாக அவர் தளபதி 66 படத்திலிருந்து விலகிக் கொண்டு உள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக தான் பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூஜையில் விவேக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.