அது எதுவும் உண்மை இல்லை நம்பிடாதீங்க என ரசிகர்களுக்கு பிக்பாஸ் ராஜூ ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பயணத்தைத் தொடங்கி பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்தவர் ராஜு ஜெயமோகன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 5-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெருவாரியான மக்களின் மனதில் இடம் பிடித்து டைட்டிலை வென்றார்.

அது எதுவும் உண்மை இல்லை நம்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு பிக் பாஸ் ராஜூ கொடுத்த ஷாக் - வைரலாகும் பதிவு.!!

மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார் ராஜு. இந்த நிலையில் இவர் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படத்தில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுவரை ட்விட்டர் பக்கத்தில் நான் அந்த படத்தில் நடித்திருப்பதாக பரவும் தகவல் உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இது எல்லாம் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஓபனிங் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அது எதுவும் உண்மை இல்லை நம்பிடாதீங்க.. ரசிகர்களுக்கு பிக் பாஸ் ராஜூ கொடுத்த ஷாக் - வைரலாகும் பதிவு.!!

ராஜூ கார்த்தியுடன் இணைந்து சர்தார் படத்தில் நடித்து இருப்பதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தான் நடிக்கவில்லை என கூறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ‌