50 லட்சம் ரூபாய் பணத்தை ஜெயித்ததும் ராஜூ செய்த வேலையால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Raju Helps After BB5 Victory : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக ராஜூ பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Dhanush படத்தில் நடிக்க முதலில் பயந்தேன்-Interview With Actress DimpleHayathi | VeeramaeVaagaiSoodum

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அவருடைய சம்பளம் ஒன்று சேர்த்து கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய் கிடைத்தது.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடங்கியது : முன்னேறிய வீராங்கனைகள் விவரம்..

டைட்டிலை வென்ற ராஜூ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு தனக்குத் தெரிந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு பண உதவி செய்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மாவுக்கு ஜெயித்த பணத்தை புடவை ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.