Rajnikanth discharged from appolo hospital

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Rajnikanth discharged from appolo hospital : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு இருந்தார்.

அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் சென்னை திரும்பியுள்ளார்.

இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.