Rajma Sundal Recipe
Rajma Sundal Recipe

தேவையான பொருட்கள்:

ராஜ்மா – 1/2 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – 1 இன்ச் துண்டு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
கருவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை:

1. ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைத்து குக்கரில் வேக வைக்கவும்.

2. தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

3. கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.

4. வேகவைத்த ராஜ்மாவை, தண்ணீருடன் சேர்க்கவும். அதில் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here